வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (19:56 IST)

பெண் குழந்தையே பிறக்காத உத்தரகாண்ட் கிராமங்கள் :அதிர்ச்சி தகவல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பிறந்த குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாஷி  மாவட்டத்தைச் சேர்ந்த  132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக சுமார் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் இவற்றில் ஒருகுழந்தை கூட பெண் குழந்தை இல்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அந்த மாவட்ட நீதிபதி ஆஷிஷ் சவுகான், பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க அளவில் இருப்பதாகவும், சில மாதங்களாக பெண் குழந்தைகளே பிறக்காத இடங்களை கண்டறிந்துள்ளோம் . இதுகுறித்து அங்கு தொடர்ந்து கண்காணிப்பு நடத்தப்படும் ஏன் பெண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 
மேலும் பெண் சிசுக்கொலை நடப்பதைத்தான் இந்த புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது என்று தெரிவித்துளார், 
 
இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.