சிறுமியை மயக்கி தனி விமானத்தில் சில்மிஷம்: சிக்கிய கோடீஸ்வரர்!

Last Updated: திங்கள், 20 மே 2019 (11:47 IST)
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் தனி விமானத்தில் சில்மிஷம் செய்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த ஸ்டீபன் பிராட்லிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. ஆனால். இவருக்கு பேஸ்புக் மூலம் 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்த பழக்கத்தின் அடிப்படையில் அந்த சிறுமியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து இருவரும் சந்தித்துள்ளனர். சில சந்திப்புகளில் சிறுமியை பக்காவாக பேசி மயக்கியுள்ளார். 
 
இதனையடுத்து சிறுமியுடன் தனிமையிலும் இருந்துள்ளார். இதோடு நிறுத்தாமல் தனி விமானத்தில் சிறுமியை அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளார். இந்த செய்தி வெளியுலகத்திற்கு தெரியவர போலீஸார் ஸ்டீபனை கைது செய்துள்ளனர். 
 
இவர் மீது நடைபெற்று வந்த விசாரணையில், இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு விரைவில் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :