1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (08:23 IST)

'நீட்'டில்லா தமிழகம் விரைவில்... உறுதிபூண்ட உதயநிதி!!

கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ’நீட்’டில்லா தமிழகம் விரைவில் அமையும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் நீட் தேர்வு கட்டுபாடுகளுடன் நடந்து முடிந்தது. 
 
இந்நிலையில் திமுக சார்பில் தற்கொலை செய்துக்கொண்ட மூன்று மாணவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் சார்பில் அக்குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். 
 
இதன் பின்னர் 'முயன்றோம்; முடியல' என அடிமைகள் கைவிரித்தது முதலே தற்கொலைகள் அதிகமாகின்றன. காலைப்பிடித்து கமிஷன் அடிப்பதற்கு பதிலாக சட்டையைப்பிடித்து நீட் வேண்டாம் என்றிருந்தால் நம் பிள்ளைகள் உயிர் போயிருக்காது என டிவிட்டர் பதிவிட்டுள்ளார். 
 
அதோடு, மாணவர்களே பொறுமை காப்போம். கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ’நீட்’டில்லா தமிழகம் விரைவில் அமையும். கடும் போராட்டங்களை நடத்தியாவது நீட் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். 
 
இதற்கு முன்னர் நீட் தேர்வு அச்சம் காரணமாக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.