கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டசபை கூட்டம்: நீட் பிரச்சனையை திமுக எழுப்புமா?
கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கொரோனா பாதுகாப்பு காரணமாக முதல் முறையாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் அனைத்து கட்சி எம்எல்ஏ களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு விட்டது என்பதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பதும் தெரிந்ததே. 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் அவர்கள் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள்
இந்த நிலையில் இன்று முதல் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் நீட்தேர்வு மரணம் குறித்த விஷயங்களை எழுப்ப திமுக தயாராகி வருகிறது என்பதும் அதற்கு பதிலடி கொடுத்த அதிமுகவும் தயாராகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது