தாத்தா ஊரிலிருந்து அரசியல் பயணம்! – உதயநிதியின் சூறாவளி சுற்றுப்பயணம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்காக தொடர்ந்து 100 நாள் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 100 நாட்கள் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் நடத்த முடிவெடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், உதயநிதியின் தாத்தாவுமான கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் அருகிலுள்ள திருக்குவளையிலிருந்து பிரச்சாரத்தை நாளை முதல் தொடங்கும் அவர் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணம் திமுகவிற்கு மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கும் அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை அளிக்கும் என திமுக வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.