அபராதம் செலுத்தினாலும் உடனே விடுதலை கிடையாது! – சசிகலா ரிலீஸில் சிக்கல்!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா அபராதம் செலுத்தினாலும் உடனே விடுதலை செய்யப்பட வாய்ப்பில்லை என சிறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பாரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி நேற்று செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி கூறுகையில் “அபராதம் செலுத்தி விட்டதால் மட்டும் சசிகலா உடனடியாக விடுதலையாக வாய்ப்பில்லை. அபராதம் செலுத்தினாலும் ஜனவரி 20க்கு பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார். இன்னும் அவரது விடுதலை நாள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என கூறியுள்ளார். இதனால் சசிகலா விடுதலையாவதில் மேலும் இழுபறிகள் ஏற்படுமோ என அவரது ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.