சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா
சனாதனத்தை ஒழிக்க வேண்டும்" என்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சீக்கிரமே ஜெயிலுக்கு போவார் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாடு 2023 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் உரையாற்றிய உதயநிதி, "சனாதன எதிர்ப்பு மாநாடு" என்று போடாமல், "சனாதன ஒழிப்பு மாநாடு" என்று போட்டுள்ளீர்கள்; அதற்கு வாழ்த்துக்கள். இதையெல்லாம் எதிர்க்க கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அவர் பேசினார்.
இந்த விவகாரம் பல மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, "விரைவில் அனைத்து மாநிலங்களிலும் உதயநிதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும். மேலும் சீக்கிரமாகவே அவர் ஜெயிலுக்கு போய்விடுவார்" என்று தெரிவித்தார்.
"சனாதன இந்து தர்மத்தை டெங்கு கொசு, மலேரியா மாதிரி நீ கொன்னுடுவியா? உங்களுக்கு அவ்வளவு திமிர் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "இந்த தேச விரோத தீய சக்திகள் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படுவார்கள்" என்று கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva