புதன், 19 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2025 (08:35 IST)

நிறைவடைந்தது சென்னைப் புத்தகக் கண்காட்சி.. 20 கோடி ரூபாய்க்கு விற்பனை!

சென்னையில் டிசம்பர் 27ஆம் தேதி முதல்  48 ஆவது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்னதாகவே கண்காட்சி தொடங்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே நிறைவடைந்தது.

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் தொடர்ந்து 17 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியில் கடந்த ஆண்டை விட புத்தகங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை ஆவதாக பதிப்பாளர்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள தகவலின் படி புத்தகக் கண்காட்சிக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்ததாகவும் சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகம் விற்பனை ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.