Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோசிச்சி சொல்றோம்னு சொல்லியிருக்காங்க!.. திமுகவில் உதயநிதிக்கு சீட் கிடைக்குமா?...

Written By Mahendran
Updated: திங்கள், 23 மார்ச் 2026 (14:16 IST)
கலைஞர் கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என வாரிசு அரசியல்வாதியாக இருப்பவர்தான் உதயநிதி. ரெட் ஜெயண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சினிமாவில் களமிறங்கினார்.. அதன் பின் சில திரைப்படங்களில் நடித்தா.ர் ஒரு கட்டத்தில் திமுகவில் சில பதவிகளை வாங்கி சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம்  - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ வெற்றிபெற்றார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. இந்த தொகுதியில் உதயநிதி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்..

2026 சட்டமன்ற தேர்தலிலும் உதயநிதி அந்த தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு மற்றும் தேர்தலில் போட்டியிஉம் வேட்பாளர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது
. அந்த வகையில் ஒவ்வொரு வேட்பாளரையும் நேரில் அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அப்போது அவர்களின் பின்னணி, ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக இருந்தால் ‘5 வருடங்களாக உங்கள் தொகுதியில் என்ன செய்திருக்கிறீர்கள்?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகிறது.  

அதேபோல் உதயநிதியிடமும் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அதன்பின் செய்தியாளரிடம் பேசிய உதயநிதி ‘திமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டேன்.. ‘இதுவரை உங்கள் தொகுதிக்கு என்னென்ன செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.. செய்தவற்றை கூறினேன்.. ‘யோசித்து சொல்கிறோம்.. போய் வாருங்கள்’ எனக் கூறி அனுப்பி வைத்தார்கள்’ எனக் கூறியிருக்கிறார்.

உதயநிதிக்கு நேர்காணல் நடத்தியது ஒரு கண் துடைப்புதான்.. அவருக்கு கண்டிப்பாக சேப்பாக்கம் தொகுதீல் சீட் கொடுப்பார்கள் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.<>

எல்லாம் காட்டு

ஆங்கிலம் கற்க பெங்களூரு வந்த ஜப்பான் இளைஞருக்கு தவறாக சிறை.. ரூ.75,000 நஷ்ட ஈடு...

150 நாளில் ஜென் சி இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த நேபாள பிரதமர்.. இந்தியாவை எதிர்த்ததன் விளைவா?

இன்று ஒரே நாளில் 397 விமானங்கள் தாமதம்.. 26 விமானங்கள் ரத்து.. டெல்லியில் என்ன நடந்தது

கூட்டணி இல்லாம ஜெயிச்சி காட்டுங்க பாக்கலாம்!.. திமுகவுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!..

இந்தியாவில் லாவா அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் விராட் வி1 ப்ரோ 5ஜி: பட்ஜெட் விலையில் இவ்வளவு சலுகைகளா?

அடுத்த கட்டுரையில்
Show comments