தமிழக முதல்வர் கைகாட்டும் நபர் தான் இந்திய பிரதமர்.. தென்காசியில் உதயநிதி பேச்சு..!
தமிழக முதல்வரை கை காட்டும் நபர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும் எனவே இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என்றும் தென்காசியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் அவர்களுக்கு வாக்கு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்
மக்களவைத் தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்றும் எனவே நீங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பேசினார்
திமுக கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்து இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் தமிழக முதல்வர் கைகாட்டும் நபர் தான் பிரதமராக வருவார் என்றும் அவர் கூறினார்
பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்றும் பிரதமர் மோடியை இனி மிஸ்டர் 29 பைசா என்று அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டுக்கு அவர் வெறும் 29 பைசா மட்டுமே தருகிறார் என்றும் ஆளும் பாஜக மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை தருகிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்
Edited by Mahendran