புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (17:32 IST)

முதல்வர் குடும்பத்துடன் ஜாபர் சாதிக் நேரடி தொடர்பு... நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

nirmala
போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஓசூர் ராம்நகரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரைப் பற்றி எந்த விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி என்றார்.
 
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக எத்தனையோ எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கூட பலவிதமான திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நல்லது செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ரூ.5 ஆயிரத்து 427 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும்  கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
தமிழத்துக்கு பிரதமர் வந்து சென்றால் ‘மைக்ரேட் பேர்ட்ஸ்’ என செல்கிற அளவுக்கு நமது முதல்வரின் நிலைமை உள்ளது என்றும் தமிழகத்துக்கு பிரதமர் ஒவ்வெரு முறையும் வரும்போது பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்றும் ஆனால், பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டித் திரும்பி போ என செல்கிற அவர்கள் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி என வரும்போது கலெக்‌ஷனுக்கு மட்டும் வருகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
 
முதல்வர் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக, போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
 
போதைப்பொருள் கடத்தல் வழங்கில் கைதான ஜாபர் சாதிக், அந்த குடும்பத்துடன் நேரடி தொடர்பு வைத்துள்ளார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார்.

 
போதைப் பொருட்கள் மூலமாக கோடி கோடியாக சம்பாதித்து தனது குடும்பம் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும் போதைப் பொருட்கள் மூலம் வரக்கூடிய ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்தக் குடும்பமும் வாழ்ந்தது இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் கடுமையாக சாடினார்.