ராகுல் காந்தி பிரதமராவது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் நல்லது- ஸ்ரீதர் வாண்டையார் பேச்சு.
சிவகங்கை அரண்மனை வாசலில் சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து,மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மத்தியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். ராகுல் காந்தி பிரதமராவது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் நல்லது.
500 கோடிக்கு மேல் சென்னையில் நிதி மோசடியில் ஈடுபட்டவர் பாஜக வேட்பாளராக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும்,ராகுல் காந்தியும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பதாக கூறியுள்ளனர்.
இதன் மூலம் தான் சமூக நீதி நிலை நாட்டப்படும். முக்குலத்தோர் சமுதாயத்தின் மீது போடப்பட்ட 2000 க்கும் மேற்பட்ட வழக்குகளை கலைஞர் கருணாநிதி வாபஸ் பெற்றார். சமுதாய மக்களுக்கு ஓபிஎஸ் சும், டிடிவி தினகரனும் அதிகாரத்தில் இருந்தபோது ஒன்றும் செய்யவில்லை மாறாக இவர்கள், தேவர் குருபூஜை விழா, மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவிற்கு ஜெயலலிதா 144 தடை உத்தரவு பிறப்பித்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிவகங்கையில், மருது பாண்டியர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்று பேசினார்.