செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 ஜூன் 2021 (20:04 IST)

அடிமைகள் சீரழித்த மின்துறையை மீட்டது கழக அரசு: உதயநிதி!

10 ஆண்டு காலம் அடிமைகள் சீரழித்த மின்துறையை கடந்த 50 நாட்களாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசு மீட்டெடுத்து வருகிறது என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகத்தின் மண்டல கலந்தாலோசனை கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி 10 ஆண்டு காலம் அடிமைகள் சீரழித்த மின்துறையை கடந்த 50 நாட்களாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசு மீட்டெடுத்து வருகிறது என கூறினார்.
 
மேலும் TANGEDCO கலந்தாலோசனை கூட்டத்தின்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள மின்துறைசார்ந்த கோரிக்கை- ஆய்வின்போது தெரியவந்த பிரச்சினைகள் குறித்த கோப்புகளை மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உதயநிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.