1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Era Mutharasan hospitalized at Chennai

இரா.முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி: நேரில் சென்று நலம் விசாரித்த உதயநிதி!

இரா முத்தரசன்
இரா.முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி: நேரில் சென்று நலம் விசாரித்த உதயநிதி!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் மூத்த அரசியல்வாதிகளுக்கு மரியாதை கொடுப்பதில் முதலிடம் கொடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தான் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உடன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டதும் உதயநிதி ஸ்டாலின் அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
உதயநிதியிடம் இன்று நிவாரண நிதி வழங்கியோர் விபரங்கள்!