1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman question to DMK government

சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? திமுக அரசுக்கு சீமான் கேள்வி!

சீமான்
சாவி தொலைந்து விட்டதா? அல்லது பெட்டியை தொலைந்துவிட்டதா? என திமுக அரசுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.
 
என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நான் தமிழின் அபிமானி - பிரதமர் மோடி