1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (19:59 IST)

கலைஞர் தொலைக்காட்சி ஓட்டுனருக்கு திருமணம்: உதயநிதி வாழ்த்து!

கலைஞர் தொலைக்காட்சி ஓட்டுனருக்கு திருமணம்: உதயநிதி வாழ்த்து!
கலைஞர் தொலைக்காட்சியின் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் அமர்நாத் என்பவருடைய திருமணம் இன்று நடைபெற்றது. அடுத்து இந்த திருமணத்தில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார் 
 
இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கலைஞர் தொலைக்காட்சியில் ஓட்டுநராக பணியாற்றி வரும் சகோதரர் பாலு அவர்களுடைய மகன் அமர்நாத் - ஹேமலதா ஆகியோரின் திருமணத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இல்லத்தில் இன்று நடத்தி வைத்தோம். மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுயமரியாதையோடு வாழுமாறு வாழ்த்தினோம்.
 
உதயநிதி ஸ்டாலின் மட்டுமன்றி திமுக பிரமுகர்கள் பலரு அமர்நாத் - ஹேமலதா திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் வருகையால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவருக்கு தங்களது நன்றி என்றும் அமர்நாத் தந்தை பாலு அவர்கள் தெரிவித்துள்ளார்