உதயநிதியின் சனாதன வழக்கை பயன்படுத்த பாஜக திட்டம்.. பீகார் துணைமுதல்வரிடம் திமுக ஆலோசனை..!
பாட்னா நீதிமன்றத்தில் உதயநிதி சனாதனம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த வழக்கு நடந்து வரும் நிலையில் இந்த வழக்கை மக்களவைத் தேர்தல் வரை லைம்லைட்டில் வைத்திருக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கை எம்பி, எம்.எல்.ஏக்கள் விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி உதயநிதி ஆஜராக வேண்டும் என்றும் அல்லது அவரது வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனாதன வழக்கை எப்படி கையாள்வது என்பது குறித்து பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வின் உதவியை திமுக தரப்பினர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை பயன்படுத்தி பாஜக தேர்தலில் வெற்றி பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது எப்படி என்ற ஆலோசனையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு தேர்தல் நெருங்க நெருங்க திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Siva