ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:53 IST)

உதயநிதி ஸ்டாலின் என்னை கண்டு அஞ்சுகிறார்.! புதிய வழக்கு போட முயற்சி.! கொக்கரித்த சவுக்கு சங்கர்..!!

திமுக அரசு என்னை கண்டு அஞ்சுகிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் என்னை கண்டு அஞ்சுகிறார் என்றும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
 
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது களியக்காவிளை காவல்நிலைய பெண் ஆய்வாளர் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில்  நீதிபதி மோசஸஸ் ஜெபசிங் முன்னிலையில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்த நிலையில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஜாமின் வழங்கபட்டு உள்ளதை சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.
 
இதைத்தொடர்ந்து நீதிபதி மோசஸஸ் ஜெபசிங், பல்வேறு நிபந்தனைகளுடன் சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.   சவுக்கு சங்கரை பலத்த  பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது நீதிமன்றத்தில் செல்லும் போதும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த போதும் செய்தியாளர்களை பார்த்ததும் அடுத்த அடுத்த வழக்குகளில் மீண்டும் மீண்டும் என்னை கைது செய்ய முயற்சி நடக்கிறது என்று சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.  
 
திமுக அரசு என்னை பார்த்து அஞ்சுகிறது என்றும் உதயநிதி என்னை கண்டு அஞ்சுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆவேசமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

 
சவுக்கு சங்கர் மீது பல மாவட்டங்களில் 17 வழக்குகள் பதிவு செய்யபட்டு இருக்கிறது என்று அவரது வழக்கறிஞர் டேவிட் தெரிவித்தார். ஒவ்வொரு வழக்குகளில் இருந்தும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.