1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (15:28 IST)

திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட ஊபா பிரிவு சட்டம் ரத்து - நீதிமன்றம் அதிரடி

பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பேசியதாக திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட ஊபா பிரிவு சட்டத்தை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு வழக்கு பாய்ந்தது. 2017 ஆம் ஆண்டு திருமுருகன் காந்தி பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டது. அதில் ஒன்று ஊபா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
 
இந்நிலையில் இன்று இதுகுறித்து விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள ஊபா பிரிவு வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.