திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (20:17 IST)

சதுரங்க வேட்டை சம்பள பாக்கி: மனோபாலா மீது அரவிந்த் சாமி வழக்கு

ஹெச்.வினோத் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை படம் நல்ல  வரவேற்பை பெற்றது. இப் படத்தின் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

 
இதில் நடிகர் அரவிந்த்சாமி, திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்தை நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா தயாரித்துள்ளார்.
 
இப்படம் நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் உள்ளது.  இந்நிலையில் அரவிந்த்சாமி தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கி வரவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதில் தனக்கு வரவேண்டிய  ரூ.1.79 கோடி தரக்கோரி தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் படத்தின் வெளியீட்டை தடுப்பது தங்களது நோக்கமல்ல. எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை தந்தால் போதும் என அரவிந்த்சாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இவ்வழக்கை வரும் 20ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தவிட்டார்.