திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (13:01 IST)

தண்டவாளத்தை ஒட்டி நின்று, செல்ஃபி: ரயில் மோதி இரு இளைஞர்கள் பரிதாப பலி..!

Train Track
திருப்பூர் அருகே தண்டவாளத்தை ஒட்டி செல்பி எடுத்து இரண்டு இளைஞர்கள் ரயில் மோதியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பூர் அருகே அணைப்பாளையம் என்ற பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி ரயில் வரும்போது 22 வயது பாண்டியன் மற்றும் 25 வயது விஜய் ஆகிய இருவரும் செல்பி எடுக்க முயன்றனர். 
 
அப்போது நெல்லையிலிருந்து பிளாஸ்பூர் சென்ற விரைவு ரயில் அவர்கள் இருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவதும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது இருவரும் ஈரோடு மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர்கள் என்றும் திருப்பூரில் வேலை செய்ய வந்த இடத்தில் தண்டவாளம் அருகே ஆக போது செல்பி எடுப்பார்கள் என்றும் அப்போது செல்பி எடுக்கும்போது தான் வெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. 
 
ரயில் வரும் பாதையில் செல்பி எடுக்கக் கூடாது என ஏற்கனவே ரயில்வே துறை பலமுறை எச்சரிக்கை செய்திருந்தும் இன்று இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran