1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (17:03 IST)

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமிரபரணி ஆற்று பாலத்தில் திமுகவினர் டிரில்லிங் மெஷின் கொண்டு ஓட்டை போட்டதாகவும், அதை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த 1843 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக இந்த பாலத்தின் இரு புறங்களிலும் டிரில்லிங் மிஷினில் ஓட்டை போட்டு, இரும்பு கம்பிகளை நட்டு, அதில் கட்சிக்கொடியை ஏற்றி உள்ளனர். பழமையான பாலத்தில் ஓட்டை போட்டதை கண்டித்து அதிமுகவினர் பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை அடுத்து கொடிக்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவின் படி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி செய்த பின்னரே அதிமுகவினர் கலந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Editd by Mahendran