திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (18:50 IST)

மெட்ரோ ரயிலில் மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி.. ஆனால் ஒரு நிபந்தனை..!

Metro
டெல்லி மெட்ரோ ரயிலில் இதுவரை மது பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மது பாட்டில் கொண்டு செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 டெல்லி மெட்ரோ ரயில் இரண்டு மதுபாட்டில்களை ஒரு நபர் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி மெட்ரோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மது போதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. 
 
டெல்லி மெட்ரோ ரயில் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல மட்டுமேஅனுமதி என்றும் மதுக்களை அருந்த அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva