வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2023 (14:10 IST)

ரயில்வே ஸ்டேஷனில் தூங்கியவர்களின் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பிய போலீஸ்: அதிர்ச்சி தகவல்..!

ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் தண்ணீர் ஊற்றிய ரயில்வே போலீசார் எழுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
புனே ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் முகத்தில் ரயில்வே போலீஸ் தண்ணீர் ஊற்றி எழுப்பியதாக தெரிகிறது. 
 
இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ’ரயில்வே நிலைய வளாகத்தில் தூங்குவது பிற பயணிகளுக்கு அசெளகரியத்தை உண்டாக்கும் என்பது உண்மைதான். ஆனால் இதனை கையாள முறையான வழிகள் உள்ளன என்றும் இதில் தொடர்புடைய காவலருக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டதாகவும் இச்செயல் மிகவும் வருத்தத்தக்கது என்றும் புனே ரயில்வே மண்டல மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். 
 
தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது ரயில்வே காவலர் தண்ணீர் ஊற்றி எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran