வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (18:07 IST)

அந்த நகையை காட்டுங்க – கடைக்காரர் திரும்பியதும் நகை பெட்டியை திருடிய கும்பல்

சென்னையில் கடைக்காரர் கவனத்தை திசை திருப்பி நகைப்பெட்டியை திருடி சென்ற இரண்டு பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நகைக்கடை வைத்திருப்பவர் தருண் குமார். நேற்று நகை வாங்குவதற்காக இரண்டு பெண்கள் கடைக்கு வந்துள்ளனர். “அந்த டிசைன் காட்டுங்க.. இந்த டிசைன் காட்டுங்க” என அவர்கள் கேட்க அவர் எல்லாத்தையும் எடுத்து காட்டியிருக்கிறார்.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு எதையும் வாங்காமல் சென்றுவிட்டனர் அந்த பெண்கள். எல்லாவற்றையும் எடுத்து வைக்கும்போது வலது பக்க அலமாறியில் இருந்த நகைப்பெட்டி காணாமல் போனதை கவனித்திருக்கிறார் தருண். உடனடியாக சிசிடிவி காட்சிகளை பார்த்திருக்கிறார்.

அதில் ஒரு பெண் பேசிக்கொண்டிருக்க மற்றொரு பெண் அந்த நகைபெட்டியை எடுத்து கைப்பைக்குள் வைத்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியான தருண் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீஸ் அந்த பெண்களை பற்றி துப்பு துலக்கி வருகின்றனர்.

அந்த பெட்டியில் இருந்த நகையின் மதிப்பு 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.