திமுக ஆட்சிக்கு வர இரண்டு ‘கல்’ காரணம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
திமுக ஆட்சிக்கு வர கல் தான் காரணம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
இன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக ஆட்சிக்கு வருவதற்கு 2 கல் தான் காரணம் என்றும் அவற்றில் ஒரு கல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் மக்கள் நம்பிக்கையுடன் கொடுத்த மனுக்கள் என்றும் இன்னொரு கல் இளைஞர் அணி தலைவர் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய செங்கல் என்றும் கூறியுள்ளார்
அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த பேச்சை பின்னால் உட்கார்ந்திருந்த உதயநிதி புன்சிரிப்புடன் ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது