சென்னையில் மேலும் இரண்டு மகளிர் கல்லூரிகள்: அமைச்சர் தகவல்!
சென்னையில் மேலும் இரண்டு மகளிர் கல்லூரியில் கட்டப்படும் என்றும் இந்த ஆண்டு அந்த கல்லூரிகள் திறப்பதற்கான வழி வகை செய்யப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அறநிலை துறை சார்பாக சென்னையில் மேலும் இரண்டு மகளிர்கள் கட்டப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் எத்திராஜ் கல்லூரி, குவின்ஸ் மேரி கல்லூரி உள்பட ஒரு சில கல்லூரிகள் மகளிர்களுக்காக இருந்தாலும் மகளிர் கல்லூரிகளில் சீட் கிடைப்பது கடினமான சூழல் இரு
ப்பதால் தற்போது மேலும் இரண்டு மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அனேகமாக அடுத்த கல்வி ஆண்டில் இரண்டு புதிய கல்லூரிகள் மகளிர்களுக்காக சென்னையில் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.