1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (15:32 IST)

பட்டப்பகலில் பெண்ணை தாக்கி நகை கொள்ளை - சிக்கிய வாலிபர்கள் (வீடியோ)

கரூரில் பட்டப்பகலில் வீடு புகுந்த இரு வாலிபர்கள், ஒரு பெண்ணை தாக்கி நகைகளை பறித்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் ஜெஜெ கார்டனில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசிப்பவர் ரகுபதி. இவரது மனைவி லதா. நேற்று (24-03-18)  மாலையில் வீட்டில் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் அத்து மீறி நுழைந்த 2 இளைஞர்கள் லதாவை தாக்கி சத்தம் போடாமல் இருக்கும் படி கூறியதோடு, அவரிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலியுடன் இணைந்த தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பினர்.
 
 
சாதூர்த்தியமாக செயல்பட்ட லதா திருடன் தாலி கொடியை பறித்துக் கொண்டு ஓடுவதாக சத்தம் போட்டுள்ளார். நிலைமையை உணர்ந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பசுபதிபாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் இரு  இளைஞர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
மொத்தம் 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்ததாகவும், இரண்டு இளைஞர்கள் சிக்கிக் கொண்டதால் இரு சக்கர வாகனத்தில் வந்த மற்ற ஒரு இளைஞர் தப்பியோடிய விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நூதன செயின்பறிப்பு இப்பகுதியில் குடியிருக்கும் இல்லத்தரசிகளிடம் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் இந்த திருட்டு சம்பவமும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காட்சிகள் தற்போது வாட்ஸ் அப்பில் தீவிரமாக பரவி வருகின்றதையடுத்து, காவல்துறை தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
-சி.ஆனந்தகுமார் - கரூர்