திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 மார்ச் 2018 (06:17 IST)

நாட்டின் நம்பர் 1 நிறுவனமாக மாறிய வீடியோகான்: எப்படி தெரியுமா?

கேபிள் எல்லாம் முடிந்து அனைத்து வீடுகளிலும் செட்டாப் பாக்ஸ் போடப்பட்டு வரும் நிலையில் டிஷ் டிவி துறையில் தனியார் நிறுவனங்களின் போட்டிகள் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் விடியோகான் நிறுவனத்தின் d2h சேவையில் டிஷ் டிவி இணைந்துள்ளது. இதன் மூலம் வீடியோகான் நாட்டிலேயே மிகப்பெரிய டிடிஎச் சேவை நிறுவனம் என்ற நிலையை அடைந்துள்ளது

கடந்த 2016ஆம் ஆண்டே விடியோகான் மற்றும் டிஷ் டிவி நிறுவனங்கள் இடையே இணைப்புக்கான ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து நடந்த பல்வேறு நடைமுறைகளுக்கு பின்னர் தற்போது இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ இணைந்துள்ளன.

இதன் மூலம் டிடிஎச் சேவையில் விடியோகான் நிறுவனம் இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு தற்போது 2.8 வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.