Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதியை உடனே காலி செய்ய வேண்டும் -18 எம்.எல்.ஏக்களுக்கும் தனபால் உத்தரவு

Written By Murugan
Updated: திங்கள், 18 செப்டம்பர் 2017 (16:00 IST)
தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியை உடனே காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.


 

 
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இதற்கு தினகரன் மற்றும் மற்ற அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதோடு, இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களின் சார்பிலும், தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும், அரசு  சென்னையில் அவர்களுக்கு ஒதுக்கியுள்ள விடுதியை உடனே காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். அறைகள் காலி செய்யப்பட்டதும், அங்கு சீல் வைக்கப்படும் எனத் தெரிகிறது. 

எல்லாம் காட்டு

H-1B விசாவுக்கான கட்டணம் ரூ.99 லட்சம்!.. டிரம்ப் திட்டம்!.. இந்தியர்கள் அதிர்ச்சி...

தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முடியாதா?!.. சட்டசபையில் செங்கோட்டையன் Vs பழனிச்சாமி மோதல்...

ஹார்மூஸில் மறுபடியும் கண்ணிவெடி வெச்சா!.. டொனால்ட் டிம்ரப் கடும் எச்சரிக்கை!...

ஸ்டாலின்தான் சிறந்த முதலமைச்சர்!.. கரப்பான் பூச்சி கட்சி அபிஜித் தீப்கே கருத்து!...

நச்சு பழங்கள், விதை விற்பனை.. அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உரிமங்கள் ரத்து.. அதிரடி நடவடிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments