1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (09:35 IST)

டிடிவி பெங்களூரு விஜயம்... சசிகலாவுடன் முக்கிய தகவல் பரிமாற்றங்கள்!

இன்று பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென டிடிவி தினகரன் தனி விமானத்தில் டெல்லி சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சசிகலா விடுதலை குறித்தும், பாஜகவுடன் அமமுக கூட்டணி நடத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அவர் டெல்லி சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன. 
 
ஆனால், டெல்லி சென்று திரும்பிய அவர், டெல்லி சென்றது தனிப்பட்ட காரணங்களுக்காக என்றும் அரசியல் குறித்து எதுவும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும் அவர் டெல்லி சென்றது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது.
 
இந்நிலையில் இன்று பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார். டெல்லி பயண தகவல்கள், அவர் விடுதலை குறித்தும் இருவரும் பேசிக்கொள்வார்கள் என தெரிகிறது. 
 
கடந்த ஆறு மாதங்களாக சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்காமல் இருந்த நிலையில் தற்போது சசிகலா விடுதலை தேதி வெளியானதற்கிடையே அவரை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.