செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:56 IST)

வலி குறைந்துள்ளது… அஸ்வின் போட்ட டிவீட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அஸ்வின் இப்போது வலி குறைந்துள்ளதாக டிவீட் செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஐபிஎல் தொடரில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசி களத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள டிவீட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ‘மைதானத்தை விட்டு வெளியேறும்போது வலி இருந்தது. ஆனால் இப்போது வலி இல்லை. மேலும் ஸ்கேன் ரிப்போர்ட்களும் சாதகமாக வந்துள்ளன’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவர் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் விளையாடுவார் எனத் தெரிகிறது.