ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:57 IST)

திடீரென மோடியை சந்தித்த திமுக எம்பிக்கள்… டி ஆர் பாலு தலைமையில்!

இந்திய பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள் இன்று டெல்லியில் சந்தித்தது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக திமுக எம்பிக்களின் நாடாளுமன்ற பேச்சு கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் திருத்தப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு எதிராக அவர்கள் பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு தலைமையில் மோடியை டெல்லியில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் காவிரியின் குறுக்கெ மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என மோடியிடம் வலியுறுத்தினர்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மோடியிடம் கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.