செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (13:13 IST)

தமிழகத்தில் இல்லாத வெடிகுண்டு கலாச்சாரத்தை தூண்டுகிறது பாஜக - டிடிவி தினகரன்

தமிழகத்தில்தான் வெடிகுண்டு கலாச்சாரம் இல்லை. ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 
நேற்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் சமஸ்கிருத பாடலான மகா கணபதி ஒலிக்கப்பட்டது.
 
இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்படாமல், சமஸ்கிருத பாடல் ஒலிக்கப்பட்டது பாஜக மத அடிப்படையில் செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
சென்னை ஐஐடியில் சமஸ்கிருத ஒலிக்கப்பட்டத்தில் எந்த தவறும் இல்லை என ஹெச்.ராஜா மாற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் கூறியதாவது:-
 
சென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது தவறானது. சமஸ்கிருதம், இந்தியை திணிக்க பாஜக முயற்சிக்கிறது. இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற நோக்கில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். 
 
தமிழகத்தில்தான் வெடிகுண்டு கலாச்சாரம் இல்லை. ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக. ஹெச்.ராஜா ஒருமையில் பேசி தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை உருவாக்கிறார்.