1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (20:14 IST)

மோடி பங்கேற்ற விழாவிற்கு வந்த தமிழிசையை அனுமதிக்க மறுத்த காவல்துறையினர்

பிரதமர் மோடி பங்கேற்ற அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவிற்கு தாமதமாக வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதான் உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது.
 
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
பிரதமர் வந்த பின் தாமதமாக வந்ததாலும், பாதுகாப்பு காரணங்கள் கருதியும் அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நீண்ட வாக்குவாதத்துக்கு பிறகு விழாவில் பங்கேற்க தமிழிசை அனுமதி வழங்கப்பட்டது.