1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (10:45 IST)

அமமுக வாஷ் அவுட்? நோ ப்ராப்ளம் ஸ்டேட்டஸில் தினகரன்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு புது பொறுப்புக்குழுவை அறிவித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன். 
 
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது.    
 
இது ஒரு பக்கம் இருக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படுவதால் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும், வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் சந்தித்து வருகிறார் தினகரன். இதற்காகவே இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியும் உள்ளார்.  
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளருமான பச்சைமால் அதிமுகவில் சேரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவருடன் சேர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.  
 
இந்த செய்தி வெளியானதும் சற்றும் கலங்காமல் டிடிவி தினகரன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு புது பொறுப்புக்குழுவை அறிவித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து பச்சைமால் விடுவுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். 
 
அதோடு மாணிக்கராஜா கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக பணிகளை இனி கவனித்துக்கொள்வார் எனவும் அறிவித்துள்ளார். கட்சியை விட்டு ஒவ்வொருவராக விலகி அமமுக வாஷ் அவுட் ஆனாலும், புது ஆளை இறக்கி மீண்டும் இன்னிங்சை துவங்குகிறார் டிடிவி.