கலெக்டரா? சரவண பவன் சர்வரா? பொங்கி எழுந்த ஆட்சியர்
ஆழ்துளை கிணறை மூட கோரி மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியில் அழைத்த இளைஞரை ஆட்சியர் “ராஸ்கல்” என திட்டிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறை மூட கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் என்பவருக்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார் செம்பிய நத்தம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர். அப்போது ஆட்சியர் “உங்களுக்கு அக்கறை இருந்தால் உங்கள் பகுதியில் உள்ள பிடிஓ அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.
மேலும் ஆத்திரமடைந்த ஆட்சியர், “உங்களுக்கு கலெக்டர் என்ன சரவண பவன் சர்வரா? என கேட்டு “ராஸ்கல்” என திட்டியும் உள்ளார். இதன் ஆடியோ பதிவு செய்தி ஊடகங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.