ஆர்.கே.நகரில் வெற்றி - ஜெ.வை தாண்டி சாதனை செய்த தினகரன்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தினகரன் சாதனை படைத்துள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40, 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
2016ம் ஆண்டு, இதே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா ராஜேந்திரனை விட 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், தற்போது தினகரனோ, மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை தாண்டி டிடிவி தினகரன் சாதனை செய்துள்ளார். அதேபோல், 2004ம் ஆண்டிற்கு பின் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோற்ற கதையும் தற்போதுதான் அரங்கேறியுள்ளது.