1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (15:21 IST)

தம்பியை கட்சியை விட்டு நீக்கிய ஓபிஎஸ்: பின்னணியில் தினகரன்?

அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நேற்று அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தினகரனின் பெயர் அடிப்பட்டுள்ளது. 
 
ஆம், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராக ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் ஓ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளனர். 
 
இந்த நீக்கத்திற்கு பின்னணியில் தினகரனின் பெயர் அடிபடுகிரது. அதாவது, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராக தான் தேர்வு செய்யப்பட வேண்டி ஓ.ராஜா தினகரன் தரப்பிடம் சென்று ஆதரவு கேட்டாராம். இதனால்தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாராம். 
 
மேலும், அதிமுகவினர் யாரும் ஓ.ராஜாவுடன் எந்தவித தொடர்வும் வைத்துக்கொள்ளக் கூடாது. ராஜா அதிமுக அரசின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராகவும், முரணாகவும் செயல்பட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.