செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (21:37 IST)

முதல் பாலே சிக்சர்! அருண்ராஜாவை, உச்சி முகர்ந்த பிரபல இயக்குனர் !

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் , சத்யராஜ் நடித்துள்ள படம் கனா.



பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் ஒரே புள்ளியில் இணைந்து அருண்ராஜா காமராஜ்  இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பார்த்த திரை உலகினர் எல்லாருமே பாராட்டி தள்ளி வருகின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது டுவிட்டர் பக்கத்தில், "கனா படம் மூலம் அழகான கனவை நினைவாக்கி உள்ளார் அருண்ராஜா காமராஜ். எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், கவுசல்யாவாக மிக கடினமாக உழைத்து பலரது இதயங்களை வென்றுவிட்டார் " என கூறினார்.