வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (07:21 IST)

திருப்பதி கோவிலில் ரீல்ஸ் .. திருந்தாத டிடிஎப் வாசன்.. தேவஸ்தானம் கடும் கண்டனம்..!

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை  பிராங்க்   செய்யும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த டிடிவி டிடிஎஃப் வாசனுக்கு தேவஸ்தானம் கடும் கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது இடங்களில் பிராங்க் என்ற பெயரில் யூடியூபர்கள் செய்யும் அட்டகாசம் பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்து வருகிறது என்பதும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் யூடியூபர் வாசன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செல்லும் வழியில் கேட்டை மூடுவது போல் பிராங்க் செய்துள்ளார். இதை உண்மை என நம்பிய பக்தர்கள் வேகமாக உள்ளே செல்லும் காட்சி அந்த வீடியோவில் உள்ளன.

இதனை அடுத்து திருப்பதி தேவஸ்தானம் டிடிஎப் வாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாமி தரிசனம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்த படம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி உள்ள டிடிஎப் வாசன் யூடியூபில் வியூஸ் வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வருவதை அடுத்து அவர் இன்னும் திருந்தவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Edited by Siva