திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பின்னணி பாடகி சுசீலா!
தேனில் எந்தத் துளி தித்திப்பு என்று கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.. அப்படித்தான் பாடகி பி. சுசீலா அவர்களின் அத்தனை பாடல்களும் கேட்பவர்களுக்கு தேன் துளிகள் போன்றது.
1950 களில் இருந்து பாடல்கள் பாடி வந்த சுசீலா 70 கள் மற்றும் 80 களில் தன்னுடைய உச்சபட்ச புகழைப் பெற்றார். அதன் பின்னர் ரஹ்மானின் வரவுக்குப் பின்னரும் 90 கள் மற்றும் 2000களில் கூட சில நல்ல பாடல்கள் அவருக்குக் கிடைத்தன.
இப்போது அவர் வயது மூப்புக் காரணமாக பாடல்கள் பாடுவதைத் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் திருப்ப்தி கோயிலுக்கு சென்று தன்னுடைய முடியைக் காணிக்கையாக செலுத்தியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.