செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (14:27 IST)

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

thirupathy
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. 
 
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் வரை தரிசன டிக்கெட்டுகள், சேவைகளுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே முடிந்து விட்டன. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள்  நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதுபோல் சேவை டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்.

சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை முன் பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஜூன் 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்கு முன்பு பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.

இது போன்று செப்டம்பர் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.  இந்த சேவைகளுக்கு பக்தர்கள் நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்யும் விர்சுவல் சேவைகளுக்கான டிக்கெட் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.


மேலும் செப்டம்பர் மாதம் அங்கபிரதட்சணம் டோக்கன்கள் வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.