வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (20:21 IST)

பாஜகவில் இணைந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் சுப்பிரமணியம் என்பவரும் துணை தலைவர் அசோக்குமார் பொதுச் செயலாளர் கந்தசாமி உள்ளிட்டவர்களும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த தகவல் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து தமிழகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கூண்டோடு தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது