திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (17:03 IST)

வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது திமுக பிரமுகர்: அண்ணாமலை டுவிட்

விருதுநகரில் இளம்பெண் ஒருவரை 8 பேர்கள் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததில் அதில் ஒருவர் திமுக பிரமுகர் என்று தெரியவந்துள்ளது. ஆனால் அதிமுக பிரமுகர் என்பதை எந்த தமிழ் முன்னணி மீடியாவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது
 
விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை  கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன்.
 
இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் - இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர்
 
இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது  அறிவாலயம்  அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். 
 
முதல்வர் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து  உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?