1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (15:15 IST)

மீண்டும் சின்னத்திரையில் குஷ்பூ…. கலர்ஸ் தமிழில் வெளியாகும் மீரா!

குஷ்பூ நடிக்கும் மீரா என்ற மெகா தொடர் விரைவில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின.  பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

தோல்வியால் துவண்டிருந்த அவர் பாஜகவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என ஆசையில் இருந்துள்ளார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் மெஹா தொடர் ஒன்றில் நடித்துள்ளார். மீரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த மெஹா சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.