1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 மே 2023 (14:37 IST)

பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை தேர்ச்சி.. கல்வி தான் முக்கியம் என பேட்டி..!

தமிழகத்தில் ஒரே ஒரு திருநங்கை மட்டும் பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில் அவர் தேர்ச்சி பெற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் 94 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு எழுதிய ஒரே திருநங்கையான ஸ்ரேயா என்பவர் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளார். 
 
இதனை அடுத்து அவர் பேட்டி எடுத்தபோது எல்லா திருநங்கைகளும் கல்வியை நோக்கி செல்ல வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்றும் கல்விதான் வாழ்க்கையில் முக்கியம் என்றும் கல்வி இருந்தால் எங்கே சென்றாலும் நமக்கு நல்ல மரியாதை மற்றும் வருமானம் கிடைக்கும் என்றும் கூறினார். 
 
மேலும் திருநங்கைகள் வேறு தவறான பாதைக்கு செல்வதை விடுத்து கல்வி கற்க வேண்டும் என்றும் அவர் தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் தனக்கு இந்த அளவுக்கு அதிக மதிப்பெண் கிடைத்ததற்கு தன்னுடைய ஆசிரியர்கள் தான் காரணம் என்றும் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran