திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 அக்டோபர் 2024 (07:04 IST)

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்களில் கூட்ட நெரிசல் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 93 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் கூடியதால், பெரும் இட நெருக்கடி ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு போதிய வசதி செய்து தரவில்லை என்று ஒரு பக்கம் குற்றம் சாட்டியிருந்தாலும், தமிழ்நாடு அரசு இந்த நிகழ்ச்சிக்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெப்பம் காரணமாக அடுத்தடுத்து 200 பேருக்கு மேல் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிலர் சில மணி நேரங்களில் சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 93 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு, சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஐந்து பேர் உயிரிழப்பு என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva