Daily Horoscope
✕

நேருக்கு நேர் மேடை போட்டு பேசுவோமா? அமித்ஷாவுக்கு டி.ஆர். பாலு சவால்!

Written By siva
Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (12:55 IST)
பத்தாண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது? என நேற்று அமித்ஷா கேள்வி எழுப்பிய நிலையில் தமிழகத்தில் திமுக கொண்டு வந்த திட்டங்கள் பற்றி நேருக்கு நேர் பேசுவோமா? என டிஆர் பாலு பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில் நேற்று கலைவாணர் அரங்கில் நடந்த ஒரு விழாவில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 10 ஆண்டுகள் இருந்த திமுக தமிழகத்திற்காக என்ன செய்தது என்றும் திமுக ஊழல் கட்சி என்றும் வாரிசு அரசியலை கொண்டுவரும் கட்சி என்றும் விமர்சனம் செய்தார் 
 
இந்த நிலையில் அமித்ஷாவின் விமர்சனத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு பதிலடி கொடுத்துள்ளார். இந்தி திணிப்பு, தமிழக வருவாய் பறிப்பு, மத துவேசத்தை தவிர பாஜக வேறு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் பற்றி நேருக்கு நேர் மேடை போட்டு பேச என்னால் முடியும்.அமித்ஷா தயாரா? என சவால் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments