தொடர்புடைய செய்திகள்
- 50 தொகுதிகளை கேட்கிறாரா அமித்ஷா? அதிர்ச்சியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்
- நான் கட்சியே ஆரம்பிக்கல.. என்ன மன்னிச்சிடுங்க – ஜம்ப் அடித்த எஸ்.ஏ.சி!
- நான் சொல்ல சொல்ல முதல்வர் செய்றார்! – மு.க.ஸ்டாலின் பேச்சு!
- கூட்டணியை நாங்க பாத்துக்குறோம்; குருமூர்த்தியோடு அமித்ஷா ஆலோசனை!
- நாளை முதல் தமிழகத்தில் அதீத கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அரசு விழாவுல அரசியல் பேசக்கூடாதுன்னு தெரியலை! – அமித்ஷா பேச்சுக்கு துரைமுருகன் கண்டனம்!
நேற்று சென்னை வந்திருந்த அமித்ஷா அரசு விழாவில் திமுகவை சாடி பேசியதற்கு திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று அரசு விழாவிற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அரசு விழாவில் பேசிய அமித்ஷா “திமுகவிற்கும், காங்கிரஸுக்கும் ஊழல் குறித்து பேச தகுதி கிடையாது என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ”அரசுக்கும், அரசியலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் சர்வதிகாரம் தலைதூக்கும். அரசு விழா ஒன்றில் சம்பந்தம் இல்லாமல் அரசியல் பேசி சென்றுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. இது அவர் வகிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கு அழகல்ல” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
